
நடிகைகள் குறித்த விஷயத்தில் ஆவேசமாக கருத்து தெரிவித்த நடிகை டாப்ஸி
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான டாப்ஸி தற்போது Blurr என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் டிசம்பர் 9ம் தேதி வெளியானது. க்ரைம் ,த்ரில்லர் திரைப்படமான இப்படத்தில் டாப்ஸி அட்டகாசமாக நடித்து அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றார். இந்நிலையில் ‘நடிகைகள் மிருகம் இல்லை இவர்களுக்கும் சில பர்சனல் இருக்கிறது’ என நடிகை டாப்ஸி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். காரின் ஜன்னலில் கேமராவை வைத்தும் வீடியோ எடுக்கிறார்கள். நடிகையாக இருந்தாலும் எனது சொந்த வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. நடிகையாக இருப்பதால் மோசமான விஷயங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்று ஆவேசமாக பேசினார்.