
நடந்து சென்றபோது வழுக்கி விழுந்த பெயிண்டர் மரணம்
சென்னை கலைஞர் கருணாநிதி நகரை சேர்ந்தவர் யாக்கோப் (57). திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் நடைபெறும் படப்பிடிப்பிற்காக அங்குள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்து பெயிண்டிங் வேலை செய்து வந்த இவர், கடந்த 10-ந்தேதி இரவு இவர், தங்கும் விடுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென கால் வழுக்கி கீழே விழுந்த இவருக்கு தலையில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து யாக்கோப் மகன் ஆபிரகாம், திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.