
துணிவு படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட்..? வைரலாகும் பதிவு
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துணிவு’. இந்த படத்தில் இரண்டாவது பாடல் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘காசேதான் கடவுளடா’ என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பகிர்ந்துள்ள பாடலாசிரியர் வைசாக் ‘ மணி மணி மணி’ என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இப்படத்தின் இரண்டாவது பாடல் ‘காசேதான் கடவுளடா’ என்றும் இந்த பாடலை பாடலாசிரியர் வைசாக் எழுதியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த பதிவுகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Money 💵 Money 💵 Money 💵 https://t.co/LuUNUJ78Hf
— vaisagh (@VaisaghOfficial) December 13, 2022