
தீபிகா படுகோனின் அதீத கவர்ச்சியால் சிக்கலில் சிக்கிய ‘பதான்’ திரைப்படம்..!!
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் பதான் படத்தில் சூடாகவும் கவர்ச்சியாகவும் நடித்து வருகிறார். அவரது ஹாட் பிகினி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் ஜனவரி 25, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் முதல் பாடல் ‘பேஷாரம் ரங்’ வெளியாகியுள்ளது. முதல் பாடலைப் பார்த்துவிட்டு, சமூக வலைதளங்களில் வந்த விமர்சனங்களைப் பார்த்த பிறகு, பதான் 2023 இன் பெரிய படம் என்று கூறப்படுகிறது. இந்த பாடல் ஒரே நாளில் 1.9 கோடி பார்வைகளைப் பெற்றது. தீபிகா நீச்சல் உடையில் சூடாக காட்சியளிக்கிறார். தற்போது இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவும் நடிகை தீபிகா படுகோனின் பதான் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறுகையில், ‘பதான்’ திரைப்படம் பல்வேறு தவறுகள் நிறைந்தது. இந்த படம் மக்களின் மனதில் நச்சு தன்மையை வளர்ப்பதை அடிப்படையாகக் கொண்டது. ‘பேஷாரம் ரங்’ பாடலின் வரிகள் & பாடலில் அணிந்திருக்கும் காவி உடை மற்றும் பச்சை நிற ஆடைகளை எடிட் செய்ய வேண்டும், இல்லையெனில் படத்தை மாநிலத்தில் திரையிடலாமா வேண்டாமா என்பதை அரசு முடிவு செய்யும் என்று அவர் கூறினார்.