
தீபிகா படுகோனாவின் கவர்ச்சியால் ‘ பதான்’ படத்திற்கு தொடரும் எதிர்ப்பு..!!
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கி வரும் பதான் படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இப்படம் ஜனவரி 25, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் முதல் பாடல் ‘பேஷ்ரம் ரங்’ வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடல் ஒரே நாளில் 1.9 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது. நீச்சல் உடையில் தீபிகா சூடாக நடிக்கிறார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவும் நடிகை தீபிகா படுகோனே தனது பதான் படத்தின் பாடல் காட்சியில் காவி நிற உடை அணிந்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘பாடல் காட்சியில் தீபிகாவின் பிகினி உடை மிகவும் ஆட்சேபனைக்குரியது. இந்த பாடல் ஒரு அழுக்கான மனநிலையில் படமாக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. பேஷ்ரம் ரங் பாடலின் வரிகள் மற்றும் பாடல் காட்சிக்கான ஆடைகள் திருத்தப்பட வேண்டும். இல்லையெனில் மாநிலத்தில் படத்தை திரையிட அனுமதிக்க வேண்டுமா? இல்லையா? பரிசீலிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.