
தில்ஜித் தோசன்ஜ் மற்றும் பரினீதி சோப்ரா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
இயக்குனர் இம்தியாஸ் அலி தனது அடுத்த இயக்கத்தில் தில்ஜித் தோசன்ஜ் மற்றும் பரினீதி சோப்ரா நடிப்பில் சம்கிலா என்ற படத்தை எடுக்கவுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது. இப்படம் 1988ல் மனைவி அமர்ஜோத் கவுருடன் கொல்லப்பட்ட பஞ்சாபி இசைக்கலைஞர் அமர் சிங் ‘சம்கிலா’வின் வாழ்க்கை வரலாறு ஆகும். அமர் சிங்காக தில்ஜித் நடிக்கும் இப்படத்தில் அமர்ஜோத் வேடத்தில் பரினீதி நடிக்கிறார்.