
திருப்பத்தூரில் 2 பெண்கள் குண்டர் சட்டத்தில் கைது
நாட்டறம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ். இவரது மனைவி ஜெயலட்சுமி (38) மற்றும் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் மனைவி அம்சா (52) ஆகிய இருவரும் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக போலீசார் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவின் பேரில் பல்வேறு வழக்குகள் நிலுவை உள்ள ஜெயலட்சுமி மற்றும் அம்சா ஆகிய இருவரும் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.