
திருப்பதி ஏழுமலையானை தரிசித்த ‘சூப்பர்ஸ்டார்’..குவிந்த ரசிகர்கள்..!!
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 12ம் தேதி தனது 73வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதி சென்றுள்ளார். அங்கு அவருக்கு தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை காலை சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் திருப்பதி வந்துள்ளார் என்ற தகவல் அறிந்ததும் ரசிகர்கள் அங்கு குவியத் தொடங்கியுள்ளனர்.