
திருச்சியில் தொழிலாளிடம் பணம் பறித்த 2 பேர் கைது
திருச்சி ஜெயில் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (22) இவர் தட்டு ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி. இவர் காந்தி மார்க்கெட் பழைய மீன் மார்க்கெட் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் திருச்சி வரகனேரியை சேர்ந்த ஜாக்கிஜான் (29), மாடசாமி ( 22) ஆகிய 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 பணத்தை பறித்து கொண்டு ஓடினர். இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் கைது செய்துள்ளனர்.