
திமுகவை தோற்கடிக்க டி.டி.வி. தினகரன் புதிய திட்டம்..!!
கோவைக்கு வந்த அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தை ஆட்சி செய்ய திமுகவை ஏன் கொடுத்தீர்கள் என்று தமிழக மக்கள் தற்போது கொந்தளிப்பில் உள்ளனர் என்பதுதான் உண்மை. ஆட்சிக்கு வந்து 1½ வருடத்தில் மகனுக்கு அமைச்சர் பதவி கொடுத்தது ஏன் என்று மக்கள் கேட்கிறார்கள். வரும் தேர்தலில் ஜெயலலிதா ஆதரவாளர்கள் யாராக இருந்தாலும், எந்தப் பக்கம் இருந்தாலும், உண்மையான தொண்டர்கள் என நினைக்கும் அளவுக்கு திரள வேண்டும். அப்போதுதான் திமுகவை தோற்கடிக்க முடியும். என்று கூறியுள்ளார்.