திட்டக்குடி அருகே மதுபாட்டில் விற்றவர் கைது

திட்டக்குடி அருகே சாலையோரத்தில் மது பாட்டில்கள் விற்பனை செய்துகொண்டு இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அரசு டாஸ்மாக் கடை எதிரில் கோழியூரை சேர்ந்த மணிகண்டன் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரிடம் இருந்து ஐந்து மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *