
தானிய புலாவ் செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்:
பொரி அரிசி – 250 மில்லி
பச்சைபயறு – 100 மில்லி
முழு கருப்பு உளுந்து – 100 மில்லி
கோதுமை – 100 மில்லி
கொண்டைக்கடலை – 50 மில்லி
துருவிய தேங்காய் – ஒரு கப்
காராமணி பயிர் – 50 மில்லி
எண்ணெய் – தாளிக்க
மிளகாய் வற்றல் – 4
உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு – அரை தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – 2 சிட்டிகை
செய்முறை:
வாணலியில் பயிறு, உளுந்து, கோதுமை, கொண்டைக்கடலை போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். இதில் பொரி அரிசியையும் கலந்து கொள்ள வேண்டும். இந்த தானியங்களின் கலவையில் அரை லிட்டர் தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து குக்கரில் வைத்து வேகவிடவும்.
இரண்டு விசில் வந்ததும் வெளியில் எடுத்து வடிகட்டி கொள்ள வேண்டும். அடுப்பில் கடாய் ஏற்றி அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு பிரட்டவும். பிறகு தானியக் கலவையை அதில் போட்டு நன்றாக கிளற வேண்டும். அதன் பின்பு தேங்காய்த் துருவலை போட்டு மீண்டும் நன்றாக கிளறி இறக்கி விட வேண்டும்.