தமிழ்நாட்டில் 10-க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு..!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்று 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவ விவகாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- தமிழகத்தில் இன்று புதிதாக 4 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னை, திண்டுக்கல் உட்பட மொத்தம் 7 மாவட்டங்களில் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 31 மாவட்டங்கள் பாதிக்கப்படவில்லை. தமிழகத்தில் இன்று எந்த மாவட்டத்திலும் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *