
தமிழ்நாட்டில் மேலும் 5 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் மழை..!!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் நிலவும் கிழக்குக் காற்றின் வேகத்தில் ஏற்படும் மாறுபாட்டால் வட தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (14.12.2022) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். (15.12.2022 முதல் 18.11.2022 வரை) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். அவ்வாறு கூறுகிறது.