தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 4 ஆண், 4 பெண்கள் உள்பட மொத்தம் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, திண்டுக்கல் உள்பட மொத்தம் 7 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 31 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் கொரோனா தோற்றால் இன்று எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *