
தனது முதல் படத்தை இந்தியில் தயாரிக்கவிருக்கும் தில் ராஜு
பாலிவுட்டில் ஷாஹித் கபூர் மற்றும் அனீஸ் பாஸ்மி ஆகியோர் சமீபத்தில் ஒரு அவுட்-அண்ட்-அவுட் காமெடிக்காக இணைவதாக அறிவிக்கப்பட்டது. புதிய அறிக்கையின்படி, இந்த படம் மார்ச் மாதம் தொடங்கும் என்றும் பூல் புலையா 2 க்குப் பிறகு அனீஸ் பாஸ்மியின் அடுத்த படமாக இருக்கும். தற்போது இந்த படக்கதையை தென்னிந்தியாவின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தில் ராஜு தெலுங்குத் திரையுலகில் பிரபலமான நபர்களில் ஒருவர். அனீஸ் பாஸ்மியின் உதவியுடன் இந்த நகைச்சுவையை பான் இந்தியா திட்டமாக மாற்ற அவர் உற்சாகமாக இருக்கிறார் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த படத்தின் ஐந்து மாத ஷெட்யூல் மார்ச் மாதம் தொடங்குகிறது. இந்த படத்துக்காக நடிகர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது