
தஞ்சையில் பூட்டிய வீட்டில் நகை திருட்டு
தஞ்சை தெற்கு மானோஜிபட்டியை சேர்ந்தவர் குணசீலன் (42). இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். அப்போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த இரண்டரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து குணசீலன்தஞ்சை மருத்துவ கல்லூரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இத்தியாயடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.