
டெல்லியில் பயங்கரம்…பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய மர்மநபர்கள்..!!
டெல்லியின் தெற்கு துவாரகா பகுதியில் இன்று காலை 9 மணியளவில் 17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் மீது ஆசிட் வீசி இந்த கொடூர செயலில் ஈடுபட்டனர். அவரது முகம் மற்றும் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து மாணவி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவி மீது ஆசிட் வீசுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அமில வீச்சுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.