டிசம்பர் 23-ந்தேதி தொடங்கும் ஐபிஎல் மினி ஏலம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளுக்கும் வீரர்கள் பரிமாற்றம், தக்கவைப்பு, விடுவித்தல் போக மொத்தம் 87 வீரர்கள் தேவைப்படுகிறது. இதையொட்டி ஐ.பி.எல். வீரர்கள் மினி ஏலம் கொச்சியில் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. ஏலத்தில் பதிவு செய்த வீரர்களில் இருந்து 405 வீரர்கள் கொண்ட இறுதிப்பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டது.

இதில் 273 பேர் இந்திய வீரர்கள், 132 பேர் வெளிநாட்டு வீரர்கள். 4 பேர் உறுப்பு நாடுகளை சேர்ந்த வீரர்கள். இவர்களில் 119 வீரர்கள் சர்வதேச போட்டியில் ஆடிய அனுபவம் உடையவர்கள். 282 வீரர்கள் சர்வதேச போட்டிகளில் ஆடாதவர்கள். உறுப்பு நாட்டை சேர்ந்த 4 வீரர்களும் இதில் அடங்குவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *