டிசம்பர் 13, வரலாற்றில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

1294 – ஐந்தாம் செலசுத்தீன் திருத்தந்தை பதவியில் இருந்து விலகினார். இவர் ஐந்து மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்தார்.

1577 – சேர் பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்தின் பிளைமவுத்தில் இருந்து தனது உலகத்தைச் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பித்தார்.

1636 – வட அமெரிக்காவில் மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றம் பெக்கோட் பழங்குடியினரில்  இருந்து பாதுகாக்கவென மூன்று துணைப்படைகளை அமைத்தது.

1642 – டச்சு நாடுகாண் பயணி ஏபெல் டாஸ்மான் நியூசிலாந்தை அடைந்தார். இவரே நியூசிலாந்தை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *