டயட் சூப் செய்வது எப்படி?

தேவையான பொருள்கள்:

வெள்ளை வெங்காயம் – 3
செலரி – ஒரு கட்டு
குடை மிளகாய் – 2
முட்டைக்கோஸ் – அரை கிலோ
தக்காளி – 3
உப்பு – தேவையான அளவு
மிளகுத் தூள் – தேவையான அளவு

செய்முறை:

காய்கறிகள் அனைத்தையும் சுத்தம் செய்து சின்னதாக நறுக்கி வைக்கவும். நறுக்கிய காய்கறிகளை குக்கரில் போட்டு 3 லிட்டர் தண்ணீர் ஊற்றி மூடி அடுப்பில் வைக்கவும். 5, 6 விசில் வரவிட்டு இறக்கிவிடவும். அதனுடன் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்துக் கலந்து, பவுலில் ஊற்றி சூடாகப் பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *