
சுற்றுலா வளர்ச்சிக்காக புதுச்சேரிக்கு, ரூ.148 கோடி ஒதுக்கீடு- மத்திய மந்திரி தகவல்
புதுச்சேரியில் பாரம்பரிய சுற்றுலா, கடற்கரை சுற்றுலா, ஆன்மீகச் சுற்றுலா மேம்பாட்டுக்கான நான்கு திட்டங்களை தொடங்கி வைத்த மத்திய மந்திரி கிஷன் ரெட்டி நிகழ்ச்சியில் பேசுகையில்,
ஆண்டின் 365 நாட்களும் சுற்றுலா செல்ல உகந்த நாடு இந்தியா என்பதை உலகுக்கு உணர்த்தி வருகிறோம். பத்து லட்சம் ரூபாய் முதலீட்டில் சுற்றுலாத் தொழில் தொடங்கினால் 80 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பிரதமர் மோடி தலைமையிலான அரசு சுற்றுலா வளர்ச்சிக்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. புதுச்சேரியில் சுற்றுலா வளர்ச்சிக்காக 148 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.