
சீன வீரர்களை விரட்டியடித்த இந்திய வீரர்கள்..!!
இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று கூறி வரும் சீனா, அவ்வப்போது எல்லையில் அத்துமீறி நுழைந்து வருகிறது. சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நமது ராணுவ வீரர்களும் சீனாவின் இந்த அத்துமீறலை உன்னிப்பாக கண்காணித்து உடைத்து வருகின்றனர். இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் அத்துமீறி நுழைந்த சீன வீரர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு நாட்டு வீரர்களும் மோதிக்கொண்டனர். இந்திய வீரர்கள் தைரியமாக செயல்பட்டு சீன வீரர்களை விரட்டியடித்தனர். இந்த மோதலில் இரு தரப்பு வீரர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இரு நாடுகளும் தங்களுக்குக் கிடைக்கும் பல்வேறு பேச்சுவார்த்தை வழிகள் மூலம் சர்ச்சைக்குரிய எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க நாங்கள் ஊக்குவிக்கிறோம்,” என்று அவர் கூறினார்.