
சி.பி.ஐ.,யில் 1000-க்கும் மேலாக இருக்கும் பணியிடங்கள்..!!
லோக்சபாவில், மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:- நாட்டின் முதன்மையான புலனாய்வு அமைப்பான, சி.பி.ஐ.,யில், 7,295 பணியிடங்களில், 1,673 பணியிடங்கள் காலியாக உள்ளன. குற்றங்களை விசாரிக்க பொதுத்துறை வங்கிகள், உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து தகுந்த நபர்களை பரிந்துரைக்க சிபிஐ கேட்டுக் கொண்டுள்ளது. 2019 முதல் நவம்பர் 2022 வரை, மத்திய அரசு மற்றும் அரசியல் அமைப்புகளுக்கு எதிராக அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாக 15 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது. 28 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.