
சிறுகிழங்கு பொரியல் செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்:
சிறுக்கிழங்கு – கால் கிலோ
வரமிளகாய் – 2
சீரகம் – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 25
சிறு பற்களாக நறுக்கிய தேங்காய் – அரை கப்
தாளிக்க:
கடுகு
உளுத்தம் பருப்பு
கடலைப்பருப்பு
கறிவேப்பிலை
தேங்காய் எண்ணெய்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சிறுகிழங்கை அரை மணி நேரம் வைத்திருக்கவும். பிறகு கிழங்கை நன்றாகக் கழுவிவிட்டு தோலைச் சீவி எடுத்துவிட்டு, ஆரஞ்சு சுளை போல நீளமாக நறுக்கி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு கிழங்கை வேக வைக்கவும். வரமிளகாய், சீரகம் இரண்டையும் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம் மற்றும் தேங்காயை ஒன்றிரண்டாக தட்டி எடுத்து வைக்கவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவைகளைத் தாளித்து, தட்டி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தேங்காயைச் சேர்த்து வதக்கவும். அத்துடன் அரைத்து வைத்துள்ள வரமிளகாய், சீரகக் கலவை மற்றும் வேக வைத்த கிழங்கு சேர்த்து நன்றாகக் வதக்கி இறக்கவும்.