
சித்தார்த் மல்ஹோத்ரா , ரஷ்மிகா மந்தனா நடித்துள்ள திரைப்படம் ஓடிடிக்கு செல்கிறது
பாலிவுட்டில் மற்றொரு பாலிவுட் படம் நேரடியாக டிஜிட்டல் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள மிஷன் மஜ்னு நெட்ஃபிளிக்ஸ்’ல் 20 ஜனவரி 2023 அன்று திரையிடப்படும். இந்தச் செய்தி டிசம்பர் 13, 2022 அன்று உறுதிப்படுத்தப்பட்டது. சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ள மிஷன் மஜ்னு படம் ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்த படம் திரையரங்குகளைத் தவிர்த்துவிட்டு நேராக ஒரு பெரிய ஸ்ட்ரீமிங் தளத்திற்குச் செல்லும். சித்தார்த் மல்ஹோத்ராவின் கடைசிப் படமான தேங்க் காட் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிபெறவில்லை என்றாலும், கடந்த ஆண்டு, விக்ரம் பத்ராவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ஷெர்ஷாவும் பிரைம் வீடியோவில் நேரடியாக டிஜிட்டல் வெளியீட்டில் வெற்றி பெற்றிருந்தது .