
கே.புதுப்பட்டியில் 2 ஆயிரத்து 38 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக லோடு ஆட்டோ வந்துள்ளது. இதனை ஆய்வு செய்ய மறித்த போது வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுனர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து வாகனத்தில் இருந்த 2 ஆயிரத்து 38 கிலோ ரேஷன் அரிசியையும், வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து மாவட்ட குடிமைபொருள் குற்றப்புலனய்வு துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.