
கே.புதுப்பட்டியில் ரேஷன் அரிசி பறிமுதல் – ஒருவர் மீது வழக்கு
புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி பகுதியில் சின்னசாமி மகன் கைலாசம் என்பவர் 636 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த அரிசியையும் பறிமுதல் செய்த பறக்கும் படை தாசில்தார் வரதராஜ், புதுக்கோட்டை குடிமை பொருள் குற்றப்புலனாய்வு துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து கைலாசம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.