
கெடா மீசை.. கையில் காப்பு.. என அட்டகாசமான லுக்கில் ரசிகர்களை சந்தித்த இளைய தளபதி
கடந்த மாதம் நடைபெற்ற சந்திப்பின் போது வெள்ளை சட்டையில் நடிகர் விஜய் கலந்து கொண்டதை பார்த்து அவர் அரசியலுக்கு வரப் போகிறாரா? என கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், நேற்றைய சந்திப்பின் போது கெடா மீசை …கையில் காப்பு …கருப்பு சட்டை அணிந்து செம ஸ்டைலாக இன் பண்ணிக் கொண்டு விஜய் வந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது டிரெண்டாகி வருகின்றன. தளபதி 67 லுக்கில் அட்டகாசமாக போஸ் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார் விஜய். விஜய்யின் லேட்டஸ்ட் போட்டோக்கள் வெளியான நிலையில், மீண்டும் ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளத்தில் விஜய் ஹாஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன. இனி வரும் பொங்கலுக்கு வாரிசு படத்தையும் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு தளபதி 67 படத்தையும் கொடுக்க விஜய் ரெடியாகி விட்டார் என ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்த தொடங்கி விட்டார்கள் .