குளித்தலை அருகே கறிக்கடைக்காரருக்கு சிறை தண்டனை

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (39), விவசாயி. இவர் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வந்தார். பங்களாபுதூரை சேர்ந்தவர் மாரியப்பன் (59). கறிக்கடை நடத்தி வருகிறார். சரவணன் மாரியப்பனிடம் ரூ.30 ஆயிரம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து சரவணனிடம் சென்று மாரியப்பன் ஆடுகளை கேட்டுள்ளார். அதற்கு பணமாக கொடுத்து விடுவதாக சரவணன் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், இதில் சரவணணை ஆடு வெட்டும் கத்தியால் மாரியப்பன் குத்தியதில் அவர் காயமடைந்தார். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சரவணன் உயிரிழந்தார். இது குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர். இந்த வழக்கில் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் இன்று தீர்ப்பு வழங்கினார். மாரியப்பனுக்கு ஆயுள் சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார். இதையடுத்து மாரியப்பன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *