
குறைந்த காற்றழுத்த தாழ்வு..தென்தமிழகத்தில் கனமழை..!!
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கில் இலங்கை கடல். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி இலங்கை அருகே தமிழக மாவட்டங்களை கடந்து கரையை கடந்த பிறகு அரபிக்கடலை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உள் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.