
‘குமாரி’ திரைப்படத்தில் இடம்பெற்ற புதிய வீடியோ பாடல் வெளியிடப்பட்டது
மலையாளத்தில் பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ் வழங்கும் ‘குமாரி’ திரைப்படம் கடந்த 28ஆம் தேதி திரைக்கு வெளி வந்தது. ஐஸ்வர்யா லட்சுமி, ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நிர்மல் சகாதேவ் எழுதி இயக்கிய படம் ‘குமாரி’. தற்போது இப்படத்தின் புதிய வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் ‘ரணம்’ படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குனரும், ‘ஹே ஜூட்’ படத்தின் திரைக்கதை ஆசிரியருமான நிர்மல் சஹ்தேவ். ஃப்ரெஷ் லைம் சோடாஸ் பேனரில் ஜிஜு ஜான், ஜேக்ஸ் பிஜோய், ஸ்ரீஜித் சாரங் மற்றும் நிர்மல் சஹாதேவ் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தில் ராகுல் மாதவ், ஸ்படிகம் ஜார்ஜ், ஜிஜு ஜான், சிவாஜித் நம்பியார், பிரதாபன், சுரபி லட்சுமி, ஸ்வாசிகா, ஸ்ருதி மேனன், தன்வி ராம் ஆகியோர் நடித்துள்ளனர்.