
குடும்ப பிரச்சினை காரணமாக தொழிலாளி தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த அ.கலையமுத்தூர் கணேஷ் நகர் காலனியை சேர்ந்தவர் சரவணன் (27). கூலித்தொழிலாளியான இவருக்கு மீனா என்ற மனைவி இருக்கிறார். இதனிடையே குடும்ப பிரச்சினை காரணமாக சரவணன் மன வருத்தத்தில் இருந்து வந்த நிலையில் நேற்று இவர், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.