
குடும்பத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் பரிசு …. ஜப்பான் அரசு அறிவிப்பு
ஜப்பான் நாட்டில் பிறப்பு விகிதம் குறைவதால், அந்நாட்டு அரசு இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கிறது. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் வங்கி வழங்கும் நிதியுதவி தொகை அதிகரிக்கப்படும் என ஜப்பான் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவித்துள்ளது. குடும்பத்தில் ஒரு குழந்தை பிறக்கும் போது பெற்றோருக்கு தற்போது 420,000 யென் (ரூ. 2,52,338) நிதி உதவி வழங்கப்படுகிறது. இது 500,000 யென் (ரூ. 3,00,402) ஆக உயர்த்தப்படும். இந்த அறிவிப்பு 2023 நிதியாண்டில் அமல்படுத்தப்படும் என்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷாடா ஒப்புதல் அளித்துள்ளதாகவும் ஜப்பான் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் கட்சுலோபு கட்டோ சொன்னதாக ஜப்பான் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.