
குடியால் நேர்ந்த விபரீதம்..21 பேர் உயிரிழப்பு
மதுபானம் அமலில் உள்ள பீகாரிலும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சாப்ரா, மஷ்ரக், இசுவாபூர் பகுதிகளில் போலி மதுபானம் குடித்து 25க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 21 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கள்ளச்சாராயம் குடித்து இறந்ததால், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. கடந்த வார தொடக்கத்தில், வைசாலி மாவட்டத்தின் மஹ்னரில் கலப்பட மதுவை குடித்து மூன்று பேர் இறந்தனர், இப்போது மேலும் 21 பேர் மது அருந்தியதால் இறந்துள்ளனர்.