
காஸ்டிங் அழைப்பு விடுத்துள்ள பிரபல மலையாள பட இயக்குனர்
மலையாள பட இயக்குனர் ஆஷிக் அபுவின் OPM சினிமாஸ் தயாரிக்கும் புதிய வெப் சீரிஸுக்கு நடிகர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு வயதினரைத் தேடி நடிகர்கள் அழைப்பு வெளியிடப்பட்டுள்ளது. காஸ்டிங் அழைப்பு ஆஷிக் அபுவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது. இதில் 8 முதல் 16 வயது வரையிலான குழந்தை நடிகர்கள். 18 முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள், 20 முதல் 30 வயது வரையிலான திருநங்கைகள், 30 முதல் 40 வயது வரையிலான ஆண்கள், 35-55 வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்கள் மற்றும் 60 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள்- 80 பேர் நடிப்பதற்காக அழைக்கப்பட்டுள்ளனர். இதில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விவரங்களை https://bit.ly/OPMCasting என்ற பக்கத்தில் டிசம்பர் 24 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது .