காட்பாடியில் 3 வீடுகளில் கொள்ளை முயற்சி

காட்பாடி தாராபட பகுதியில் நேற்று மர்ம கும்பல் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டுள்ளனர்.அங்குள்ள 3 வீடுகளில் அடுத்தடுத்து பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பணம், நகை எதுவும் இல்லாததால் கும்பல் ஏமாற்றுத்துடன் திரும்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட முயற்சி நடந்துள்ளது. விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *