
கரூரில் சட்டவிரோதமாக மது விற்ற 5 பேர் கைது
கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சட்ட விரோதமாக மதுபானங்களை பதுக்கிய முத்துசாமி (57), மாரிமுத்து (45), முருகதாஸ், (26), பழனியம்மாள் (50), சசிக்குமார் (54) ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து, அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.