
கனமழையால் குற்றால மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு..!!
குற்றாலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் மேகமூட்டம் மற்றும் பனிமூட்டம் காணப்பட்டதுடன், குளிர்ந்த காலநிலை நிலவியது. லேசான சாம்பல் மழை அடுத்தடுத்து பெய்தது. இந்நிலையில் மாலை 5 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. சுமார் 20 நிமிடம் இந்த மழை பெய்தது. இதையடுத்து மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிகளில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளதால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.