கனமழையால் குன்னூரில் இடிந்து விழுந்த சாலை..!!

நீலகிரி மாவட்டத்தின் உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக மலைப்பாதையின் ஒரு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், உதகை-குன்னூர் மலைப்பாதையில் சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு வளையங்கள் போடப்பட்டு வாகனங்கள் மெதுவாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *