கடலூரில் கஞ்சா, லாட்டரி விற்ற 9 பேர் கைது

கடலூர் மாவட்டத்தில் 13-ந் தேதி கஞ்சா, லாட்டரி தடைசெய்யப்பட்ட குட்கா, போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபட்ட 22 குற்றவாளிகளை கைது செய்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் கஞ்சா விற்பனை செய்த திருப்பாதிரிப்புலியூர் சஞ்சய் (21) நெய்வேலி அஜய் (26) , பண்ருட்டி தமிழரசன் (21), நடுவீரப்பட்டு 17 வயது சிறுவன், ஏழுமலை (32), சேத்தியாத்தோப்பு தனலட்சுமி, ஸ்ரீமுஷ்ணம் வல்லரசு ஆகிய 7 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 480 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து லாட்டரி விற்பனை செய்த பாலாஜி (31), அருண்குமார் (31) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *