
கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது
வாலாஜா சப் இன்ஸ்பெக்டர் தீபன் சக்கரவர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று பூண்டி கிராமம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்குள்ள பச்சையம்மன் கோயில் அருகே நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
இந்த விசாரணையில் அவர் கஞ்சா விற்பனை செய்பவர் என்று தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.