
ஒரு செங்கல்லை வைத்து கோட்டையை தகர்த்தவர் உதயநிதி ஸ்டாலின்- ஆர்.எஸ்.பாரதி
தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்கிறார். இன்று காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெறும் விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
இது தொடர்பான சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தமிழ்நாட்டில் ஒரு செங்கல்லை வைத்து கோட்டையை தகர்த்துக் காட்டியவர் உதயநிதி ஸ்டாலின். கலைத்துறையில் வாரிசுகள் வருவது போல், அரசியலில் வாரிசுகள் வருவதில் என்ன தவறு?
உதயநிதி அரசியலில் கால் வைத்த நாள் முதல், வெற்றியை மட்டுமே தேடித் தந்துள்ளார், அமைச்சராக பதவி ஏற்கும் உதயநிதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.