
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இயல்பு நிலை நிழுவுவதாக கூறிய சீனா
இப்போது உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் நிலைமை இயல்பானது என்றும், பிரச்சினைகளைத் தீர்க்க வெளிப்படையான உரையாடல் தேவை என்றும் சீனா கூறுகிறது. தவாங் மோதலுக்கு சீனா பதிலடி கொடுப்பது இதுவே முதல் முறையாகும் . டிசம்பர் 9 ம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டாரில் இந்திய-சீனப் படையினர் மோதிக்கொண்ட சம்பவம் குறித்து சீனா எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த மோதல் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சர் நேற்று பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.