
உடல் கழிவுகளை நிக்கும் ‘கப்பிங் தெரபி’
”நம் உடலில் நான்கு வகையான திரவங்கள் உள்ளன. அவை ரத்தம், சளி, மஞ்சள் பித்தம் மற்றும் கரும் பித்தம். இதில் கரும் பித்தம் தான் நச்சுத்தன்மை உடையது. இது உடலுக்கு பல்வேறு தீமைகளை உண்டாக்குகிறது. இதை உடலில் இருந்து வெளியேற்றும்போது நன்மைகள் கிடைக்கும். கூடவே, உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், அதை சுறுசுறுப்பாக்கவும் இந்த கப்பிங் தெரபி பயன்படுகிறது. பொதுவாக, நம் தேவைக்கு ஏற்ப கை மற்றும் கால் பகுதி, முதுகுப்பகுதி, தோள்பட்டைப்பகுதி, தலைப்பகுதி ஆகிய இடங்களில் இந்த ‘கப்பிங் தெரபி’ செய்யப்படும். இதிலிருந்து கழிவுகள் வெளியேற்றப்படும்போது, உடலும், உறுப்புகளும் புத்துணர்ச்சி பெறும்” என்றவர், இதன் மூலம் உண்டாகும் சுவடுகள், ஓரிரு நாட்களிலேயே காணாமல் போய்விடும் என்றார். இப்படி உடலில் இருந்து கழிவுகள் வெளியேற்றப்படும்போது உடல் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இயங்கும். விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் உடல் சோர்வு, கை-கால் வலிகளுக்கு இது சிறந்த தீர்வாக அமையும் என்றார்.