
உடல் எடை… வயிற்றுடன் அளக்க வேண்டும்
தற்போது உடல் எடையை உயரத்துடன் தொடர்புபடுத்தி அளவிடும் பாடி மாஸ் இன்டெக்ஸ் (BMI) புழக்கத்தில் உள்ளது. 1830-க்குப் பிறகு அடால்ப் க்யூடெலட் என்ற பெல்ஜிய கணிதவியலாளரால் கண்டறியப்பட்ட இம்முறை தோராயமானது. தற்போது இதற்கு மாற்றாக அறிமுகமாகியுள்ளது, பாடி வால்யூம் இன்டிகேட்டர் (BVI). உடலின் மொத்த எடையோடு, வயிற்றிலுள்ள கொழுப்பையும் அளவிட்டு ஆரோக்கியமான எடை அளவு கணக்கிடப்படுகிறது. இச்சோதனை பி.வி.ஐ. ஆப் சோதனை மூலம் நடைபெறுகிறது.