
உக்ரைன் மீது தொடர் ட்ரோன் தாக்குதல் – 5 முக்கிய கட்டிடங்கள் சேதம்
அண்டை நாடான உக்ரைனை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி போரை தொடங்கியது. அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளை துணிவுடன் எதிர்த்து நிற்கிறது. அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளை துணிவுடன் எதிர்த்து நிற்கிறது.
இந்தநிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் ஐந்து முக்கிய கட்டிடங்கள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பல ட்ரோன்களை இடைமறித்து உக்ரைன் படைகள் முறியடித்துள்ளன. இந்த தாக்குதல்களில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியிருக்கிறது.