
ஈரானிய கால்பந்து வீரர் அமீர் நஸ்ர் அசாதானிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் கடந்த நான்கு மாதங்களாக ஈரானில் நடைபெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த ஈரானிய கால்பந்து வீரர் அமீர் நஸ்ர் அசாதானிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி அதிர்ச்சியளிக்கும் மற்றும் மனவேதனை அளிப்பதாக கால்பந்து வீரர்கள் சங்கமான FIFPRO ட்வீட் வெளியிட்டுள்ளது . அமீருடன் நாங்கள் ஒன்றிணைந்து நிற்கிறோம், அவரது தண்டனையை நிறுத்த வேண்டும் என்று கோருகிறோம் என்று ட்வீட் செய்துள்ளது . ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக இரண்டு பேர் தூக்கிலிடப்பட்டதை அடுத்து இந்த ட்வீட் வெளிவந்துள்ளது. இதனால், உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு கொண்டு வருகின்றனர்.