இரண்டாம் சீன-சப்பானியப் போர் முக்கிய நிகழ்வுகள் டிசம்பர் 13

1758 – வில்லியம் கோமகன் என்ற ஆங்கிலேயக் கப்பல் வடக்கு அத்திலாந்திக் கடலில் மூழ்கியதில் 360 பேர் உயிரிழந்தனர்.

1867 – இலண்டன், கிளெர்க்கென்வெல் என்ற இடத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

1888 – யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சூறாவளியில் பலத்த சேதம் ஏற்பட்டது.[1]

1937 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: சீனாவின் நாஞ்சிங் நகரம் சப்பானிடம் வீழ்ந்ததை அடுத்து அங்கு பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும், பாலியல் வதைக்கும் உள்ளாக்கப்பட்டனர்.

1938 – பெரும் இன அழிப்பு: செருமனியின் ஆம்பர்கு நகரில் நியூவென்காம் வதை முகாம் திறக்கப்பட்டது.

1943 – இரண்டாம் உலகப் போர்: கிரேக்கத்தில் கலவ்ரித்தா என்ற இடத்தில் செருமனியப் படைகள் நடத்திய தாக்குதல்களில் 1,200 கிரேக்கப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *