
இனிமேல் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, “இனிமேல் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை. கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கவிருந்த படத்தில் இருந்து விலகுகிறேன். ‘மாமன்னன்’ திரைப்படம் தான் எனது கடைசி திரைப்படம்.” என்று கூறினார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாமன்னன்’ திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார்.